Sunday, May 26, 2024

ரத்து செய்யப்பட்ட தேர்வு கட்டணத்தை செலுத்துமாறு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு – தீர்ப்பு ஒத்திவைப்பு!!

Must Read

அண்ணா பல்கலைக்கழகம் பருவத்தேர்விற்கான கட்டணத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்துமாறு மாணவர்களிடம் கூறினர். இதனை எதிர்த்து மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுத்தாக்கலை விசாரித்த நீதிபதி தேர்வு கட்டணம் குறித்த தீர்ப்பினை தற்போது உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு வந்தனர். இதனால் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. ரத்து செய்யப்பட்ட பருவத்தேர்விற்கான கட்டணத்தை செலுத்துமாறு மாணவர்களை வற்புறுத்தினர். அதுவும் கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்த உத்தரவிட்டது.

anna university 1
anna university 1

இதனை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழத்தில் சார்ந்த படிக்கும் அனைத்து கல்லூரி மாணவர்களும் எதிர்த்து தாக்கல் செய்தனர், சென்னை உயர்நீதிமன்றத்தில். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் விசாரிக்கப்பட்டது.

விசாரணை

நீதிபதி தலைமையின்கீழ் விசாரித்த இந்த வழக்கில், அண்ணா பல்கலைக்கழகம் கூறியது என்னவென்றால் முன்பே தேர்வு கட்டணத்தை வசூலிக்கப்பட்டதாகவும், தேர்வின் முந்தைய பிந்தைய செலவுகள், தேர்வு நடைபெறாமல் இருந்தாலும் மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றிற்கும் கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டியதாக அமைகிறது. அந்த மதிப்பெண் சான்றிதழை அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பிவைப்பதற்கான செலவும் உள்ளது என பல்கலைக்கழக சார்பில் தெரிவித்துள்ளார்.

Chennai_High_Court
Chennai_High_Court

சென்னை உயர்நீதிமன்றம் தேர்வு நடைபெறாத நிலையில் எவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் முந்தைய மற்றும் பிந்தைய செலவை முன்பே தீர்மானித்தது? என்ற கேள்வியை எழுப்பியது. ரத்து செய்யப்பட்ட தேர்வு கட்டணம் குறித்த தீர்ப்பின் முடிவினை தற்போது வழங்காமல் வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 11

https://www.youtube.com/watch?v=mMI3g0F7hA0 Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -