Tuesday, April 30, 2024

50% விலையில் கொரோனா தடுப்பூசி – ஆக்ஸ்போர்டு நிறுவனம் தகவல்!!

Must Read

ஆக்ஸ்போர்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்தின் விலை 50 சதவீதம், அதாவது ரூ.500 அல்லது 600 விலைக்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுமக்களுக்கு கிடைக்கும் என சீரம் நிறுவனத்தின் சிஇஓ அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழம், அஸ்டிரஜெனிகா மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. உலகம் முழுவதும் இம்மருந்தின் இறுதிகட்ட பரிசோதனை நடந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் அவசரகால அனுமதியை மத்திய அரசு வழங்கினால், வரும் ஜனவரி, பிப்ரவரியில் கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் எனவும், நபர் ஒருவருக்கு இரண்டு முறை தடுப்பூசி கட்டாயமாக போட வேண்டும். உறுதிப்படுத்திய விலையான 500 அல்லது 600 ரூபாயில் இருந்து இந்தியாவுக்கு அந்நிறுவனம் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்திய ரூபாய் மதிப்பில் 2 டோஸ்கள் விலை ரூ.1000க்கு விற்கப்படலாம் என்று சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா கூறியிருந்தார். ஆனால் மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு 50 சதவீதம் குறைத்து 500 அல்லது 600 ரூபாய்க்கு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பூசி மருந்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக, எந்த புகார்களும் இதுவரை எழவில்லை. இந்தியாவில் செய்யப் பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் ஒன்றரை மாதங்களில் கிடைத்துவிடும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -