Thursday, May 2, 2024

பட்டியலின ஊராட்சி மன்ற தலைவியை தரையில் அமர வைத்து கூட்டம் – கடலூரில் அவலம்!!

Must Read

பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக பெண் ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமரவைத்து கூட்டம் நடைபெற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஊராட்சி மன்ற தலைவர்:

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் பஞ்சாயத்து துணை தலைவராக ராஜேஸ்வரி மற்றும் மோகன் இருக்கின்றனர். இதில் துணை தலைவர் ராஜேஸ்வரி பட்டியலின வகுப்பினை சேர்ந்தவர். கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி ஊராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் துணை தலைவர் ராஜேஸ்வரியை பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக தரையில் அமரவைத்து கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

rajeshwari
rajeshwari

பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் உண்மை தானா?? என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தலைவர் மோகன் தான் இவ்வாறு செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இப்படி சாதி வேறுபாடு பார்க்கும் மோகன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அவர்களை பணி நீக்கம் செய்ய கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ராஜேஸ்வரி வேதனை:

இது குறித்து துணை தலைவர் ராஜேஸ்வரி கூறியதாவது “பஞ்சாயத்து நடைபெறும் போது எப்போதும் மோகன் என்னை கீழே தான் அமர வைப்பார். கொடி ஏற்றும் போதும் அவர் தான் ஏற்றுவார். என்னை ஏற்ற விட மாட்டார். நானும் பொறுத்து போனேன். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் தான் புகார் அளித்து விட்டேன்.” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பிரபல பின்னணிப் பாடகி திடீர் மறைவு., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தவர் உமா ரமணன். இவர் கடந்த 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தில்  இடம்பெற்ற பூங்கதவே தாழ்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -