ஐபிஎல் 2020: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி – டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்!!

0

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

பஞ்சாப் vs கொல்கத்தா:

அபுதாபியில் 3.30 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களமிறங்க உள்ள கொல்கத்தா அணியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் 5ல் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி பரிதாபகரமான நிலையில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

விளையாடும் 11 அணி:

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கே.எல்.ராகுல் (கேப்டன்), மாயங்க் அகர்வால், மந்தீப் சிங், நிக்கோலஸ் பூரன், சிம்ரன் சிங் (கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், முஜீப் உர் ரஹ்மான், கிறிஸ் ஜோர்டன், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றங்கள் – ஜாதவ் வெளியே, ஜெகதீசன் உள்ளே!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ராகுல் திரிபாதி, சுப்மான் கில், நிதீஷ் ராணா, சுனில் நரைன், ஈயோன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் (கேப்டன் & கீப்பர்), பாட் கம்மின்ஸ், கமலேஷ் நாகர்கோட்டி, பிரசீத் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here