ஒரே மாதத்தில் முக அழகை அதிகரிக்க – பாட்டி வைத்தியம்!!!

0
beauty tips
beauty tips

அந்த காலத்தில் இப்பொழுது இருக்கும் அளவிற்கு அழகு சாதனப் பொருட்கள் இருக்காது. ஆனால் அந்த காலத்தில் இயற்கையாகவே தங்களின் அழகை பராமரித்து வந்தனர். இப்பொழுது இயற்கையாகவே முக அழகை எப்படி வசீகரமாக மாற்றுவது என்பதை பாப்போம்.

முகப்பொலிவை அதிகரிக்க??

அந்த காலங்களில் வெளியில் யாரும் சாப்பிட மாட்டார்கள். வீட்டு உணவுகளை மட்டுமே உட்கொண்டு வந்தனர். இதனால் அவர்களின் உடலும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் தற்போது மாறி வரும் சூழ்நிலையால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சரும ஆரோக்கியமும் கெட்டு வருகிறது. இப்பொழுது இயற்கையாகவே முக அழகை எப்படி பராமரிப்பது என்பதை இந்த பதிவில் காணலாம்.

Coriander

முகத்தில் இருக்கும் கரு வளையங்களை நீக்க கண்களை அடிக்கடி நீரால் கழுவ வேண்டும். மேலும் தக்காளி அல்லது வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களில் 15 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

beauty tips
beauty tips

மேலும் தினமும் காலையில் எழுந்த உடன் தண்ணீர் குடித்து விட்டு வெறும் வயிற்றில் இஞ்சி சாறு அல்லது வெற்றிலை சாறு வாரத்திற்கு ஒரு முறை குடித்து வர வேண்டும். இதனால் உடலில் ஜீரண சக்தி அதிகரிக்கும். மேலும் முகமும் பிரகாசமாக இருக்கும். அல்லது வெற்றிலையை தேன் ஊற்றி 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம். ஏனெனில் உடல் ஆரோக்கியம் தான் முகத்திலும் பிரதிபலிக்கும்.

கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய்

கொத்தமல்லி, இஞ்சி, கேரட் அல்லது பீட்ரூட் சேர்த்து சாறு பிழிந்து சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால் 1 மாதத்தில் மினுமினுப்பான சருமத்தை பெறுவது உறுதி.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

முக அழகிற்கு என தனியாக விற்பனை செய்யப்படும் கிரீம்கள் அந்த காலத்தில் இருக்காது. எனவே தான் அவர்கள் ஆவி பிடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டனர். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.

beauty tips
beauty tips

மேலும் தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை முகத்தில் தடவி வந்தால் சருமம் மென்மையாகவும், சுருக்கம் இல்லாமலும் இருக்கும். இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் கட்டாயமாக நமது சரும அழுகு அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here