Thursday, May 2, 2024

நாட்டை உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!!

Must Read

உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணம் அடைந்த வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.

இளம்பெண் பலாத்காரம்:

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் பகுதியில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி தலித் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் 4 இளைஞர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கி சாலையில் வீசி எறிந்தனர். இந்த சம்பவம் நாடெங்கிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனைத்து தரப்பு மக்களும் அந்த குற்றவாளிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அவரது உடலை போலீசார் அவசர அவசரமாக நள்ளிரவு 2 மணி அளவில் எரித்தனர். இதனால் மக்கள் மேலும் கொந்தளிப்பு அடைந்தனர். அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை எரித்ததற்காக காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். இப்படி பல சர்ச்சைகளுடன் இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று முதல்வர் ஆதித்யநாத் பரிந்துரைத்தார். இப்படியான நிலையில், தற்போது உச்சநீதிமன்றதில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுக்களில் கோரிக்கை:

அதில் கூறியிருப்பது என்னவென்றால் “ஹத்ராஸ் பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்தால் அது சரியாக இருக்காது. இந்த வழக்கினை ஓய்வுபெற்ற நீதிபதிகளின் தலைமையில் விசாரிக்க வேண்டும். சிறப்பு கண்காணிப்பு விசாரணையும் நடத்தபட வேண்டும். அப்போது தான் உண்மை என்னவென்று நம் அனைவருக்கும் தெரிய வரும். சிபிஐ விசாரணை மேற்கொண்டாலும் நீதிபதிகளின் கண்காணிப்பில் தான் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும். மேலும், உத்தரபிரதேசத்தில் இந்த வழக்கு விசாரிக்கபட கூடாது. டெல்லிக்கு மாற்றப்பட்டு வழக்கை விசாரிக்க காலக்கெடு நிர்ணயித்து விசாரணை நடத்தபட வேண்டும்.” என்று மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ?? – கல்வியமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்!!

arvind bobde, chief judge
arvind bobde, chief judge

இந்த மனுக்களை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது. இந்த விசாரணையின் முடிவில் தான் ஹத்ராஸ் வழக்கு விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதிகளின் தலைமையில் நடைபெறுமா?? என்று தெரிய வரும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

வடிவேலுக்கு அடித்த துரதிர்ஷ்ட லாட்டரி.., கடைசில நிலைமை இப்படி ஆகிடுச்சே.., ஷாக்கிங் நியூஸ்!!

காமெடி கலைஞராக மக்கள் மனதில் தற்போது வரை நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் வடிவேலு. இவருக்கும் இயக்குனர் சங்கருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -