ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ‘முட்டைக்கோஸ் மஞ்சூரியன்’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
cabbage manjurian

முட்டைக்கோஸில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. முட்டைகோஸ் வயிற்றில் உள்ள அல்சரை கூட குணமாக்கும் பண்பை கொண்டுள்ளது. ஆனால் பலருக்கு முட்டைக்கோஸ் என்றாலே பிடிப்பதில்லை. குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவதில்லை.  இப்பொழுது முட்டைகோஸை வைத்து சுவையான மஞ்சூரியன் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

manchurian
manchurian

முட்டைக்கோஸ் – 1/2 கி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

சோளமாவு – 1 தேக்கரண்டி

மைதாமாவு – 1 தேக்கரண்டி

உப்பு

குடைமிளகாய் – 1

பச்சைமிளகாய் – 3

பூண்டு – 3

வெங்காயம் – 1

தக்காளி சாஸ் – 2 தேக்கரண்டி

சோயா சாஸ் – 2 தேக்கரண்டி

செய்முறை

முதலில் முட்டைகோஸை நன்கு துருவி எடுத்துக் கொள்ளவும். அதில் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து அதன் பின் சிறிது சோளமாவு மற்றும் மைதா மாவு சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். அதன்பின் சிறு சிறு உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

cabbage manjurian
cabbage manjurian

அதன் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இந்த முட்டைக்கோஸ் உருண்டைகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, குடைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

cabbage manjurian
cabbage manjurian

நன்கு வதங்கியதும் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் 2 தேக்கரண்டி தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ளவும். அதன்பிறகு சோயா சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும். 5 நிமிடங்கள் அடுப்பை சிறிதாகப் வைத்து வதக்க வேண்டும்.  இப்பொழுது பொரித்து வைத்த உருண்டைகளை அதில் சேர்த்து கிளறவும். கொத்தமல்லி தூவி 5 நிமிடங்களுக்கு பிறகு இறக்கினால் சுவையான முட்டைக்கோஸ் மஞ்சூரியன் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here