பிரபல கிரிக்கெட் வீரர் சாலை விபத்தில் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

ஆப்கானிஸ்தான் அணியின் பிரபல பேட்ஸ்மேன் நஜீப் தாராகாய் மீது கடந்த வாரம் கிழக்கு நங்கர்ஹாரில் சாலையைக் கடக்கும்போது ஜீப் ஒன்று வேகமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அக்டோபர் 6ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நஜீப் தாராகாய் விபத்தில் காயமடைந்ததை உறுதிப்படுத்தி இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சில நாட்களுக்கு முன்னர் கோமா நிலைக்கு சென்றார். இதனால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் 29 வயதான அவர் இன்று மரணம் அடைந்தார். இவர் ஆப்கானிஸ்தான் அணியின் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என ரசிகர்கள் புகழ் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு டி 20 மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். ஒரு தொடக்க பேட்ஸ்மேனான அவர் 2017ம் ஆண்டு அயர்லாந்திற்கு எதிரான டி 20 போட்டியில் 90 ரன்கள் விளாசியவர்.

அவர் ஒருநாள் போட்டிகளில் 47.20 சராசரி ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு 200 உட்பட, ஆறு சதங்கள் அடக்கம். கடந்த ஆண்டு ஷ்பகீசா கிரிக்கெட் லீக்கில் ஸ்பீன் கர் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இழப்பு கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here