Saturday, May 25, 2024

“கிரெடிட்” மற்றும் “டெபிட்” கார்டு பயன்பாடு – RBI இன் புதிய நடைமுறைகள்!!

Must Read

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளாக கருதப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பாதுகாப்பு அம்சங்களுக்காக புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது, மத்திய ரிசர்வ் வங்கி. இதன் மூலமாக வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு:

நாடு முழுவதிலும் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை தான் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த பரிவர்த்தனையின் போது பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி பல புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த நடைமுறை இந்த மாதத்தில் இருந்து பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன நடைமுறைகள்:

பல புதிய நடைமுறைகள் மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது. அவை,

  • ஏற்கனவே ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாமல் வைத்திருக்கும் கார்டுகளை வங்கியில் சென்று காட்டிய பிறகு தான் இனி பணபரிவர்த்தனை செய்ய முடியும்.
  • ஏதேனும் ஆபத்து என்று தெரிந்தால் வங்கிகள் நடப்பு அட்டைகளை செயலிழக்க செய்து விட்டு புதிய அட்டைகளை வழங்கலாம்.
  • ஒரு அட்டைதாரர் இந்தியாவுக்கு வெளியே டெபிட் கார்டு பயன்படுத்த விரும்பினால் வங்கியின் அனுமதி பெற வேண்டும். இதன் மூலமாக சர்வதேச பணப்பரிவர்த்தனையும் செய்யலாம்.

  • புதிய நடைமுறைகளின்படி அட்டை பயனாளர்கள் தங்களது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு “சுவிட்ச் ஆப்” மற்றும் “சுவிட்ச் ஆன்” வசதியை செயல்படுத்தி கொள்ளலாம்.
  • இனி சர்வதேச பரிவர்த்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஆகியவற்றிற்கு செலவு வரம்பிற்கேற்ப அமைத்து கொள்ளலாம்.
  • ஏடிஎம் பரிவர்த்தனைகளில் இருந்து விலகிக் கொள்ளலாம்.

  • இனி எந்த ஒரு பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றாலும் வங்கியை அணுகிய பின் தான் செயல்படுத்த முடியும். இயல்பு நிலையாக கிடைக்கும் சேவைகள் இனி கிடைக்காது.
  • வாடிக்கையாளர்கள் தங்களது பயன்பாடுகள், செயலி பயன்பாடுகள், கார்ட் பயன்பாடுகள் இவைகளில் மாற்றம் கொண்டு வர விரும்பினால் அனைத்து வங்கிகளும் 24/7 சேவை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறாக புதிய நடைமுறைகள் ரிசர்வ் வங்கியால் கொண்டு வரப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

KKR vs SRH இறுதிப்போட்டியில் மழைக்கு வாய்ப்பு.. வெளியான வானிலை ரிப்போர்ட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா நைட்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -