Sunday, May 19, 2024

இனிப்பு வகைகளில் காலாவதி தேதி இல்லையென்றால் ரூ.2 லட்சம் அபராதம் – FSSAI அதிரடி!!

Must Read

இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் மக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகளை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தரமற்ற இனிப்பு தயாரிப்பு:

உணவு பொருட்களின் தரத்தை நிர்ணயிக்கும் அமைப்பு தான், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI). கடைகளில் வாங்கப்படும் உணவுகளில் ஏதேனும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலக்கப்படுகிறதா??அல்லது மக்களின் சுகாதாரத்தை கெடுக்கும் விதமாக உணவு பொருள் தயாரிக்கபடுகிறதா?? என்பதை கண்காணிப்பது தான் இந்த ஆணையத்தின் பணி.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் கடைகளில் விற்கப்படும் இனிப்பு வகைகளில் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை என்ற புகார் கூறப்பட்டது. காலாவதி தேதி தெரியாததால் மக்கள் அந்த இனிப்புகளை உண்டு பல சிரமங்களுக்கும், உடல் நல பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.

FSSAI உத்தரவு:

இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக FSSAI இனி இனிப்புகளை தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும் காலாவதி தேதியை குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டது. பொது மக்களின் சுகாதார அபாயங்களை கருத்தில் கொண்டு தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அப்படி காலாவதியான அல்லது தேதி குறிப்பிடாமல் இனிப்புகள் விற்கப்பட்டால் இனி 2 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கிரெடிட்” மற்றும் “டெபிட்” கார்டு பயன்பாடு – RBI இன் புதிய நடைமுறைகள்!!

ஆனால், இந்த உத்தரவு பல சிறு, குறு இனிப்பு தொழில் நிறுவனங்களை பாதிக்கும் விதமாக உள்ளது. ஏனென்றால், இனிப்பு வகைகளை பொறுத்தவரை சரியான காலாவதி தேதியை குறிப்பிட முடியாது. அது தட்பவெட்ப நிலையினை பொறுத்து மாறும். அதனால் எப்போது வேண்டுமாலும் இனிப்பு வகைகள் கெடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த புதிய நடைமுறையில் சிறு இனிப்பு தொழில் நிறுவனங்கள் கவலை அடைந்துள்ளன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -