Wednesday, May 15, 2024

இப்போதைக்கு தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

Must Read

தமிழகத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் தற்போது உள்ள நிலையில் நடைபெறாது என்று தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காலியான தொகுதிகள்:

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி காலமானார். அதே போல் குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 28ம் தேதி காலமானார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர்கள் மரணம் அடைந்ததால் தொகுதிகள் காலியாக இருந்து வந்தன. கடந்த ஜூன் மாதம் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜூன் 10 ஆம் தேதி மரணம் அடைந்தார்.

இந்திய அரசியலமைப்பு சட்டம்:

இதனால் தமிழகத்தில் தற்போது 3 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. அதே போல் கடந்த சில நாட்களுக்கு முன் கன்னியாகுமரி மக்களவை எம்.பி வசந்த குமார் கொரோனாவால் மரணம் அடைந்தார். அதனால் அவர் பதவி வகித்து வந்த மக்களவை தொகுதியும் காலியாக உள்ளது.

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு எப்போது?? அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்!!

ஒரு தொகுதி காலியானால் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம். அப்படி பார்த்தால் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதமே தேர்தல் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.

தேர்தல் ஆணையம் அறிவிப்பு:

இது குறித்து தேர்தல் ஆணையம் கூறியதாவது “தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தும் சூழல் இல்லை. இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை தற்போது இல்லாததால், தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளது.

பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -