இந்தியாவில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று – ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்!!

0

இந்திய கவுன்சில் மருத்துவ ஆராய்ச்சி (ஐ.சி.எம்.ஆர்) கவுன்சில் வெளியிட்ட இரண்டாவது தேசிய கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 10 வயதுக்கு மேற்பட்ட 15 நபர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஆகஸ்ட் மாதத்தில் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 22 வரை ஆய்வு செய்யப்பட்ட 29,082 பேரில், 6.6% பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உறுதியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு:

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, நகர்ப்புற பகுதிகளில் கிராமப்புறங்களை விட கொரோனா நோய்த்தொற்று அதிகமாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்திய மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் எளிதில் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதால் அதற்கான சங்கிலி உடைக்கப்பட வேண்டும். மே மாதத்துடன் ஒப்பிடும்போது ஆகஸ்டில் பாதிப்பு விகிதத்தில் அதிக தொற்று சோதனை, காரணமாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வரவிருக்கும் திருவிழாக்கள், குளிர்காலம் ஆகியவற்றின் காரணமாக கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் மாநிலங்களால் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

எவ்வாறாயினும், இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 51 லட்சத்தை தாண்டியுள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகமான ஒன்றாகும். இந்தியாவில் 10 லட்சம் பேரில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை உலகிலேயே மிகக் குறைவாக உள்ளதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே முதல் மாநிலம் – சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு தடை!!

உலகளவில் இந்தியாவின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1.6% ஆக உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரேசிலுடன் சேர்ந்து, உலகளாவிய கொரோனா இறப்புகள் கிட்டத்தட்ட 45% ஆகும். புதிய கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை இந்தியாவில் சற்று குறைந்து வருகிறது. இதுவரை 61 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here