தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு எப்போது?? அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்!!

0
Minister Kadambur Raju
Minister Kadambur Raju

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து உள்ள நிலையில் தியேட்டர்களை விரைந்து திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கோரி வருகின்றனர். இந்த கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

தியேட்டர்கள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 16ம் தேதி முதல் தியேட்டர்கள், நாடக அரங்கங்கள் மூடப்பட்டு உள்ளன. 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தியேட்டர்கள் திறப்பு குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் பல கோடிகள் கொட்டி செலவழித்து எடுக்கப்பட்ட பெரிய ஹீரோக்களின் படங்களும் OTT இல் வெளியாகி வருகின்றன. படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி தியேட்டர்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என உரிமையாளர்கள் கோரி வருகின்றனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Theaters
Theaters

இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனையும் நடத்தியது. ஆனால் அதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் அக்டோபர் 1 முதல் தியேட்டர்களை திறக்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் நாளையுடன் (செப்.30) ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ள நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் திரையரங்கங்கள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

பிக் பாஸ் 4 இல் அறந்தாங்கி நிஷா – வெளியான தகவல்!!

முதல்வர் உடனான ஆலோசனைக்கு பிறகு இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பிறகே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தியேட்டர்கள் திறப்பு குறித்து அறிவிப்பார் என தெரிவித்தார். மேலும் OTT பிரச்சனையில் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது என கூறிய அமைச்சர், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here