பிக் பாஸ் 4 இல் அறந்தாங்கி நிஷா – வெளியான தகவல்!!

0
aranthangi nisha
aranthangi nisha

பிக் பாஸ் 4 பற்றிய பல செய்திகள் நாள் தோறும் வெளியாகி கொண்டு தான் உள்ளன. கடைசியாக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் அக்டோபர் 4 இல் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் இந்த சீசனில் அறந்தாங்கி நிஷா கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறந்தாங்கி நிஷா

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 5 இல் கலந்து கொண்டவர் தான் அறந்தாங்கி நிஷா. இந்த நிகழ்ச்சிக்கு பின் டிவியில் வரும் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் ‘குக் வித் கோமாளி’யில் தொகுப்பாளினியாக இருந்தார். தற்போது ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை’யில் தொகுப்பாளினியாக வலம் வருகிறார். தற்போது தான் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

bigg boss 4
bigg boss 4

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 இல் அறந்தாங்கி நிஷா கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் நாள்தோறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களில் பெயர் வெளியாகி கொண்டு தான் உள்ளது. ஜித்தன் ரமேஸ், ரியோ, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், புகழ், அர்ச்சனா போன்றோர் பெயர் வெளியாகியுள்ளது.

bigg boss season 4

ஆனால் இதற்கான எந்த அதிகாரபூர்வமான அறிவிப்பும் இது வரை வெளியாகவில்லை. மேலும் தற்போது அக்டோபர் 4 இல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளது. அந்த வகையில் தான் மேலும் சில போட்டியாளர்களின் பெயரும் தற்போது கசிந்து வருகிறது. அதில் அறந்தாங்கி நிஷாவின் பெயரும் அடிபட்டுள்ளது. ஆனால் இதற்கு அவர் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

aranthangi nisha
aranthangi nisha

மேலும் அவருக்கு குழந்தை பிறந்து 1 வருடம் கூட ஆகவில்லை. இந்நிலையில் அவர் கலந்து கொள்வாரா? இல்லையா? என்ற கேள்வி அனைவர்க்கும் எழுந்துள்ளது. இந்த பிக் பாஸில் யாரெல்லாம் கலந்துகொள்ள இருக்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here