Wednesday, May 29, 2024

மனமனக்கும் மீன் பிரியாணி ரெசிபி – வீக் எண்ட் ஸ்பெஷல்!!

Must Read

இன்னைக்கு வீக் எண்டு ஸ்பெஷல் ஆக “பிஷ் பிரியாணி”. மீன் வகைகளில் சிலர் மிகவும் விரும்பி சாப்பிடுவர். அவர்களுக்கு என்று ஸ்பெஷல் ரெசிபி இதோ..

தேவையான பொருட்கள்:

  • வஞ்சரம் மீன் – அரை கிலோ
  • பிரியாணி இலை – 1
  • பட்டை – 1
  • கிராம்பு – 1
  • சோம்பு – 10 கிராம்
  • ஏலக்காய் – 3
  • இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • பச்சமிளகாய் – 2
  • காய்ந்த மிளகாய் – 2
  • துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்
  • வெங்காயம் – 2
  • தக்காளி – 3
  • தனியா தூள் – 2 டீஸ்பூன்
  • பாசுமதி அரிசி – அரை கிலோ
  • புதினா இலை – கொஞ்சம்
  • கொத்தமல்லி இலை – கொஞ்சம்
  • தேங்காய் பால் – அரை கப்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில், மசால் செய்ய மிக்ஸியில், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய் போட்டு நன்றாக விழுதாக அரைக்கவும். அதில் வேண்டும் என்றால் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
  • குக்கரை காயவைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
  • பச்சை வாசனை போனதும், இதில் அரைத்த விழுதை மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இதில் மெதுவாக மீன் துண்டுகளை சேர்த்து கிளறவும். மீன் துண்டுகளை கிண்டும் போது கவனமாக இருக்கவும்.
  • பின்பு, இதில் அரிசியை சேர்த்து, தேங்காய் பால், தண்ணீர் ஊற்றி ஒரு 2 விசில் வந்ததும், எடுத்து விடவும்.
சூப்பரான “‘ பிஷ் பிரியாணி” ரெடி!!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC பொது தமிழ் ஆறாம் வகுப்பு இலக்கிய கேள்விகள்

https://www.youtube.com/watch?v=4-LlWFlOUuk  Enewz Tamil இன்ஸ்டாகிராம் TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -