தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.., இனி இதை கடைபிடிச்சே ஆகணும்.., முழு விவரம் உள்ளே!!

0
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.., இனி இதை கடைபிடிச்சே ஆகணும்.., முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் மாதந்தோறும் மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். இந்த பொருட்கள் அனைத்தையும் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்களின் பணி நேரம் தொடர்பாக ஓர் முக்கிய அறிவிப்பை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.

அதாவது ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும், அவ்வாறு செய்யாத பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் காலை 8.30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 7:00 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும். மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

உங்க ஸ்பூனில் உப்பு இருக்கா?? இணையத்தில் வைரலாகும் ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here