உங்க ஸ்பூனில் உப்பு இருக்கா?? இணையத்தில் வைரலாகும் ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு!!

0
உங்க ஸ்பூனில் உப்பு இருக்கா?? இணையத்தில் வைரலாகும் ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு!!

ஜப்பான் நாட்டினர் உலக சுகாதார மையம் நிர்ணயித்ததை விட 2 மடங்கு அதிக உப்பு சேர்த்துக் கொள்வதால் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக தற்போது உணவில் உப்பு சேர்க்காமல், நாவிற்கு உப்பு சுவையை அளிக்கும் மின்சார ஸ்பூன் ஒன்று அந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது நாவின் சுவை அரும்புகளுக்கு உப்பு சுவையை தரும் வகையில் ரீச்சார்ஜபில் பேட்டரியில் இயங்கக்கூடிய மின்சார ஸ்பூனை, கிரின் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த ஸ்பூனை வாயில் வைக்கும்போது, நாவில் சிறிய அளவு மின்சாரம் பாய்ச்சப்பட்டு அதன் மூலம் சுவை அரும்புகளில் உள்ள சோடியம் அயனிகள் செறிவூட்டப்பட்டு, உப்பு சுவை கிடைக்கும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஸ்பூனின் விலை ரூ.10,500/- எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

மக்களே அலர்ட்.., நாளை இந்த பகுதிகளில் மின்தடை.., மின்வாரியம் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here