Saturday, May 4, 2024

குடியரசு துணைத் தலைவரின் பாராட்டு பெற்ற அரசியல்வாதி யார் தெரியுமா??

Must Read

கொள்கை மற்றும் தன் அடையாளத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் பல சகாப்தங்களாக அரசியல் வாழ்க்கை வாழ்ந்த அபூர்வமான அரசியல்வாதி திரு. ஜெய்ப்பால் ரெட்டி என குடியரசு துணைத் தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

அபூர்வமான அரசியல்வாதி:

‘Padi Bhavajalalu’ என்ற தெலுங்கு புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. எஸ். ஜெய்ப்பால் ரெட்டிக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டி உள்ளார்.

அப்படியா!! ⇛⇛⇛ ‘ஃபோட்டோ எடிட்டர் ஆப்களை’ உடனே நீக்குங்க!! கூகுளின் முக்கிய அறிவிப்பு!!!

பேச்சுத் திறன், எளிமை, ஆழ்ந்த செயல்பாடு, கொள்கைகளில் தடுமாற்றம் இல்லாத தன்மை போன்ற சிறப்புகளுக்காக அவர் என்றுமே நினைவில் கொள்ளப்படுவார் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறியுள்ளார். மறைந்த ஜெய்ப்பால் ரெட்டி அபூர்வமான அரசியல்வாதி என்றும், அரசியல் வரம்புகளுக்கு அப்பாற்பட்டு அவர் பிரபலமாக இருந்தார் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறியுள்ளார்.

ஜெய்ப்பால் ரெட்டியின் புத்தகம்:

ஜெய்ப்பால் ரெட்டி எழுதிய “Ten Ideologies- The great asymmetry between agrarianism and industrialism” என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தெலுங்கு மொழி பெயர்ப்பாக அன்று வெளியிடப்பட்ட புத்தகம் உள்ளது. திரு. ரெட்டி இலக்கியம், தத்துவம் மற்றும் பல்வேறு நாடுகளின் பொருளாதார விஷயங்களை ஆழமாகக் கற்றவர் என்றும், அதையொட்டிய காலத்தில் அரசியலைப் பார்த்தவர் என்றும் திரு. வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

சிறந்த அரசியாவதி:

நாடாளுமன்ற செயல்பாடுகளில் திரு. ரெட்டி ஆழ்ந்த ஈடுபாடுகள் கொண்டவர் எனவும் , சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தில் நியாயமான கருத்துகளை உருவாக்குவதற்கு, அந்த விஷயம் பற்றி அவர் ஆழமாகப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் எனவும் அவர் தெரிவித்தார்.

அதனால் தான் எங்கள் காலத்தில் சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவராக அவர் மதிக்கப்பட்டார்” என்றும் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார் என்பது பெருமைக்குரியது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக மக்களே., இந்த பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை., மின் துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயில் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் துணை மின் நிலையங்களில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -