Friday, March 29, 2024

ஆரோக்கியம் தரும் ‘சுவையான லட்டு’

Must Read

ரொம்பவே சத்தான எலும்புகளுக்கு வலுகுடுக்கக்கூடிய, எல்லாருக்குமே பிடிக்கக்கூடிய ‘சுவையான லட்டு’ எப்படி செய்றதுனு பாக்கலாம் வாங்க.

ஹலோ நண்பர்களே!! எல்லாரும் எப்படி இருக்கீங்க!!

இன்றைய காலகட்டத்துல ஊட்டச்சத்துக்களின் தேவை நிறைய இருக்குங்க. அதுலயும் எலும்பு சம்பந்தமான உணவுகளின் தேவை ரொம்பவே அதிகம். ஆனா எவ்ளோதா அறிவுரைகள் சொன்னாலும் நம்மளால எல்லா ஊட்டச்சத்துகளையும் எல்லா நேரத்துலயும் எடுத்துக்க முடியாது.

அதற்காகத்தான் நாம இன்னைக்கு ஈஸியாவும், எல்லாருக்கும் பிடிச்சமாதிரியானா ‘சுவையான லட்டு’ எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்:

பாதாம், நிலக்கடலை, கருப்பு எள், பாசிப்பயறு, கருப்பு உளுந்து, நல்லெண்ணெய், வெல்லம்

செய்முறை:

என்னடா அளவு போடாம போட்ருக்கேனேனு பாக்கறீங்களா?? ஆமாங்க ஒரு ஒரு பொருளோட அளவும் மாறும் அதனால பொதுவா ஒரு கப் அளவுன்னு எல்லா பொருளையும் எடுத்துக்கலாம்.

ஒரு கப்ல பாதாம், நிலக்கடலை, கருப்பு எள், பாசிப்பயறு மற்றும் கருப்பு உளுந்து எல்லாத்தையும் சம அளவு எடுத்து தனி தனியா ஒரு வடசட்டில ஆயில் சேர்க்கமா வறுத்துக்கோங்க.

அடடே அப்படியா!!! ⇛⇛⇛ குடியரசு துணைத் தலைவரின் பாராட்டு பெற்ற அரசியல்வாதி யார் தெரியுமா??

அப்பறமா கொஞ்சம் சூடு போறமாதிரி காய வச்சுடுங்க.  இப்போ அதே கப்ல 1 1/4 கப் ஒடச்ச வெல்லம் எடுத்துக்கோங்க அதையும் ஒண்ணா சேர்த்து பொடியா அரைச்சு எடுத்துக்கோங்க.

இப்போ அதுல நல்லெண்ணெய கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து உருண்டை பிடிக்க ஆரம்பிங்க. அதை ஒரு காற்று போகாத பாத்திரத்துல வச்சு சாப்பிடுங்க.

பயன்கள்:

தினமும் காலையில் ஒரு உருண்டை என சாப்பாட்டிற்கு முன் சாப்பிட்டு வந்தா எலும்புகள் வலுவடையும், பெண்களுக்கு மாதவிடாய் சீராகும், உடம்பிற்கு வலு குடுக்கும்.

குறிப்பு :

100 கிராம் பாதாம ஒரு கப்ல எடுத்து அதே அளவு மத்த பொருளையும் எடுத்து பண்ணிணா கிட்டத்தட்ட 4 பேர் 1 வாரத்திற்கு வச்சு சாப்பிடறமாதிரியான அளவுல வரும்.

பயன்தரும் இந்த ‘சுவையான லட்டு’ செய்து சாப்பிட்டு எல்லாரும் ஆரோக்கியமாக இருங்க!!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக குடும்ப தலைவிகளே., உரிமைத் தொகை ரூ,1,500ஆக உயரும்? பாஜக அண்ணாமலை வாக்குறுதி!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -