Friday, May 17, 2024

‘பாலிவுட்’ இல் களமிறங்கும் சிவகார்த்திகேயன் – ‘கனா’ ரீமேக் சுவாரசிய அப்டேட்..!

Must Read

பிரபல தமிழ்த்திரை நடிகர் சிவகார்த்திகேயன் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

“லோக்கல் ஷாருக் கான்” :

ரெமோ படத்தில் தன்னை நடிகர் சிவகார்த்திகேயன் “லோக்கல் ஷாருக் கான்” என்று கூறியிருப்பார். அதனால் அவரது ரசிகர்கள் அவரை செல்லமாக இப்படியே அழைக்கின்றனர் .

 Sivakarthikeyan
Sivakarthikeyan

சின்னத்திரை காமெடி போட்டியில் பங்கேற்று தொலைக்காட்சி தொகுப்பாளராக உருவாகி பின் வெள்ளித்திரையில் நடிகராக ஆக அறிமுகம் ஆகி இன்று ரசிகர் மத்தியில் சிம்மசொப்பனமாக விளங்குகிறார், நடிகர் சிவகார்த்திகேயன். அதோடு மட்டும் அல்லாமல் இன்று தயாரிப்பாளராகவும் உருவாகி உள்ளார்.

“கனா” படம்:

இவர் தயாரித்து அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் தான், “கனா”. இந்த படம் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான படம். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் கோச் ஆக நடித்து இருப்பார். இந்த படம் தமிழில் நல்ல வெற்றியை பெற்று தந்தது.

 Sivakarthikeyan's 'Kanaa'
Sivakarthikeyan’s ‘Kanaa’

இந்த படத்தை தெலுங்கு மொழியிலும் ரீமேக் செய்தனர். அதிலும் இந்த படம் நன்றாக பேச பட்டது. இதனால் இந்த படத்தை பாலிவுட் உலகில் ஏன் வெளியிட கூடாது என்று ஆலோசித்து வந்தனர்.

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘கிரேடு’ முறையில் தேர்ச்சி வழங்க முடிவு – கல்வித்துறை ஆலோசனை..!

பாலிவுட் பக்கம்:

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த வேடத்தில் பாலிவுட்டில் யார் நடிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. சமீபத்தில் பாலிவுட் நடிகை சயாமி கேரின் படத்தை பாராட்டிய சிவா, அவருடன் பேச்சுவார்த்தையும் நடத்தி உள்ளார். இதனால், அவர் தான் ஹீரோயின் என்று ரசிகர்கள் நினைத்து வருகின்றனர்.

sivakarthikeyen - sayami kerin
sivakarthikeyen – sayami kerin

இப்படி இருக்க சிவா இந்த படத்தில் நடித்த வேடத்தை பாலிவுட் படத்திலும் அவர் தான் நடிக்க போகிகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து அந்த படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL Points Table: 3வது அணியாக PlayOff சுற்றுக்கு தகுதி பெற்ற SRH.. மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -