தமிழகத்தில் 6, 7, 8ம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகள் திறப்பு – புதிய பாடத்திட்டங்கள் வெளியீடு!!

0

தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வருவதால் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விரைவில் 6,7, மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களுக்கான புதிய குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பள்ளி:

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டது. மேலும் கடந்த லாக்டவுன் காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. தற்போது அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் அரசு பலவித தளர்வுகளை அளித்து வருகிறது. மேலும் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு கடந்த மாதம் 19ம் தேதி அன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க உத்தரவிட்டது. மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது என்றும் அறிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் அனுமதி கடிதம் பெற்று வரவேண்டும் என்று கூறியது. மேலும் பொத்துத்தேர்வு இன்னும் சில நாட்களில் நடைபெறவிருப்பதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அச்சமடைந்தனர். இவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் பாடங்கள் குறைக்கப்பட்டது. மேலும் பொதுத்தேர்வும் எளிய முறையில் தான் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு சம்பவம் – பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!!

அடுத்தகட்டமாக கடந்த 8ம் தேதி அன்று 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இவர்களுக்கும் பாடத்திட்டங்கள் அனைத்தும் குறைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை 6,7 மற்றும் 8ம் வகுப்புகளை விரைவில் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வகுப்புகளுக்கான புதிய குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை தற்போது வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here