உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு சம்பவம் – பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!!

0

உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறைகள் உருகி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 197 பேரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

கடந்த ஞாயிற்று கிழமையன்று உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறைகள் உருகி, ரிஷிகங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 23 பேர் உயிரிழந்தனர். காணாமல் போன 171 பேரின் கதி என்னவென்று தெரியாத நிலையில், மேலும் சிலரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. இதனால பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்சா, பனிச்சரிவு ஏற்பட்டதில் ரிஷிகங்கா ஆற்றில் உருவான வெள்ளப்பெருக்கினால் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 197 பேரை காணவில்லை என நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல சித்த வைத்திய சிவராஜ் சிவகுமார் மரணம் – அரசியல் தலைவர்கள் அஞ்சலி!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ‘கடந்த 7 ம் தேதி இமயமலை பகுதியில் உள்ள தபோவன் பகுதியில் ரிஷிகங்கா ஆற்றில் பனிப்பாறைகள் உருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு இருந்த 13.2 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின்சக்திநிலையம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் தவுலிங்கா ஆற்றில் கட்டப்பட்டு வரும் 520 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின்நிலையமும் சேதமடைந்துள்ளது. மற்றொரு சுரங்கப்பாதையில் சிக்கியிருப்பதாக கருதப்படும் 35 பேரை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த மீட்பு பணிகளை பிரதமர் மோடி கவனித்து வருகிறார்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here