சீனாவின் வூகானில் இருந்து கொரோனா பரவவில்லை – WHO அதிரடி அறிவிப்பு!!

0

கொடிய வைரஸ் நோயான கொரோனா வூகானில் இருந்து பரவவில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. மேலும் இதுபற்றிய சில தகவல்களையும் வெளியிட்டு உள்ளது.

வூகான்:

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா என்னும் வைரஸ் சீனாவில் முதன்முதலாக பரவ தொடங்கியது. மேலும் சீனாவின் வூகானில் இருந்து கொரோனா முதலாவதாக பரவத்தொடங்கியது. அதன்பின்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும் லட்சக்கணக்கான மக்கள் இதனால் உயிர் இழந்தனர். மேலும் பல நாட்டின் பொருளாதாரமும் இதனால் பாதிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கொரோனா வைரஸ் எங்கு இருந்து பரவ தொடங்கியது என்பது குறித்து விசாரிக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்தது. இதற்காக 14 பேர் கொண்ட குழு கடந்த ஜனவரி மாதம் சீனாவிற்கு சென்றது. கொரோனா வைரஸ் எங்கு இருந்து பரவியது என்பதை இந்த குழு ஆராய்ந்து வந்தது. அனைத்து தரப்பு ஆய்வுகளையும் முடித்த நிலையில் இந்த குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

அப்போது அவர்கள் கூறியதாவது, கொரோனாவிற்கான மூலக்கூறுகள் இங்கு இல்லை. மேலும் வூகானில் பரவுவதற்கு முன்பாகவே கொரோனா வைரஸ் வேறு பகுதிகளில் பரவியுள்ளது என்று அந்த குழு தெரிவித்தது. தற்போது உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு சாதகமாக செயல்படுகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதனால் அமெரிக்கா இந்த அமைப்புக்கு அளித்து வரும் நிதியுதவியை தற்போது நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here