கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

0

சென்னையில் இன்றைய நிலவரப்படி விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை சற்று உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசலின் விலை நிலவரம்:

நாள் தோறும் கச்சா எண்ணெயின் விலைகேற்ப பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை மாற்றி அமைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இதனுடன் இறக்குமதி செலவு, அமெரிக்கா டாலரின் இந்திய மதிப்பு ஆகியவற்றையும் சேர்த்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிப்பர். புதிய விலை காலை 6 மணி முதல் அமலுக்கு வரும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்றைய நிலவரப்படி நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை சற்று உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர். சென்னையில் நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.89.70 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.82.66க்கும் விற்பனை செய்யப்பட்டது.

#INDvsENG டெஸ்ட் டிக்ளேர் செய்யாததற்கு இது தான் காரணம் – ரூட் விளக்கம்!!

இன்றைய நிலவரப்படி சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 1 லிட்டர் பெட்ரோல் ரூ.89.96 ஆகவும் மற்றும் டீசல் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து தற்போது 1 லிட்டர் டீசல் ரூ.82.90 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here