#INDvsENG டெஸ்ட் டிக்ளேர் செய்யாததற்கு இது தான் காரணம் – ரூட் விளக்கம்!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸ் போது இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்வதற்கு தாமதம் ஆனதாக புகார் எழுந்தது. தற்போது இது குறித்து இங்கிலாந்து கேப்டன் ரூட் விளக்கியுள்ளார்.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 5ம் தேதி அன்று முதல் டெஸ்ட் போட்டி துவங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்தது. இந்தியா தனது முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அணி இங்கிலாந்து அணியை விட 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. பின்பு தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கின் போது இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்வதற்கு தாமதப்படுத்தியதாக புகார் எழுந்தது. தற்போது இதுகுறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ரூட் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நாங்கள் தொடக்கத்திலையே டிக்ளேர் செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்டத்தின் முடிவுகள் எது என்பதை நான் உறுதி படுத்த விரும்பினேன். மேலும் இன்று பந்துவீச்சு சற்று கடினமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

கிரிக்கெட் போட்டிகளை ட்ரோன் மூலம் படம்பிடிக்க முடிவு – நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி!!

400 ரன்னை எட்டிய பின்பு தான் ரன் குவிக்கும் வேகத்தை அதிகரிக்க நினைத்தோம். இந்த மைதானத்தில் விரைவாக பந்து பௌண்டரிகளை எட்டிவிடும். அதுமட்டுமல்லாமல் ரிஷாப் பாண்ட் ஒரு செஷன் விளையாடினால் ஆட்டத்தை மாற்றியமைத்து விடுவார், இதனால் எங்களுக்கு அழுத்தம் ஏற்படும், எங்களுக்கு அழுத்தம் ஏற்பட வேண்டாம் என்று நினைத்தேன். முன்கூட்டியே டிக்ளேர் செய்திருக்கலாம் அனால் நான் எடுத்த இந்த முடிவை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here