கிரிக்கெட் போட்டிகளை ட்ரோன் மூலம் படம்பிடிக்க முடிவு – நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி!!

0

மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை வானத்தில் பறக்கும் ட்ரோன் கேமரா மூலம் படம்பிடிக்க அனுமதி கேட்டிருந்தனர். தற்போது அதற்கு நிபந்தனையுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கிரிக்கெட்:

மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை பல விதமான கேமராக்கள் மூலம் படம் பிடித்து வருவார்கள். தற்போது வானத்தில் பறக்கும் ட்ரோன் கேமரா மூலம் போட்டியை படம்பிடிக்க கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்தது. இதற்காக கிரிக்கெட் சங்கம் விமான போக்குவரத்துறை அமைச்சகத்திற்கு அனுமதி அளிக்கும்படி மனுவை அளித்தது. தற்போது இதற்கு விமான போக்குவரத்து துறை மற்றும் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தற்போது இதற்கு நிபந்தனையுடன் தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்துக்கு அமைச்சக இணை செயலாளர் கூறுகையில், ட்ரோன் விதிமுறைகள் இந்த ஆண்டு சட்ட அமைச்சகத்தின் இறுதி கட்ட ஆலோசனையில் தான் உள்ளது. இதற்கு இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் பரப்புரை பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றிய மர்ம நபர் – போலீசார் அதிரடி கைது!!

மேலும் இந்த நிபந்தனை கூடிய விளக்கு ஒப்புதல் கடிதம் பெறப்பட்ட தேதி முதல் இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை அல்லது வான்வழி தளத்தை பயன்படுத்தும் வரை ஒப்புதல் அளிக்கப்படும். இதில் எது முதலாவதாக வருகிறதோ அது வரை செல்லுபடி ஆகும். மேலும் விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டால் இந்த விளக்கு செல்லாததாகிவிடும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here