பிரபல சித்த வைத்திய சிவராஜ் சிவகுமார் மரணம் – அரசியல் தலைவர்கள் அஞ்சலி!!

0

சிறந்த சித்த வைத்தியராக திகழ்ந்தவர் தான் டாக்டர் சிவராஜ் சிவகுமார். இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

சித்த வைத்தியர்:

சித்தவைத்தியதில் பிரபலமாக இருந்தவர் தான் வைத்தியர் சிவராஜ் சிவகுமார். இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறையாக சுமார் 206 வருடங்களுக்கு மேலாக சித்த வைத்தியத்தை செய்து வருகிறது மருத்துவர் சிவராஜ் சிவகுமார் குடும்பம். இவர் ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சிக்கு மருத்துவம் அளிப்பதில் சிறந்தவர். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலத்தில் குறைபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டிஎன்பிஎஸ் சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – மே மாதத்தில் முதல்நிலை தேர்வு!!

மேலும் சிகிச்சையை மேகொண்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் நள்ளிரவு 12.50 மணி அளவில் காலமாகியுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் மக்கள் என அனைவரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அவரது உடல் சேலம் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்விகம் சிவதாராபுரத்தில் உள்ள அகஸ்தியர் மாளிகையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here