டிஎன்பிஎஸ் சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – மே மாதத்தில் முதல்நிலை தேர்வு!!

0

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 3ம் தேதியன்று குரூப் 1க்கான முதல்நிலை தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வுக்கான முடிவினை எதிர்பார்த்து பலரும் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில் தற்போது அந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

குரூப் 1 தேர்வுகள்:

குரூப் 1க்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜனவரி 3ம் தேதி நடத்தப்பட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள 18 துணை ஆட்சியர், 19 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 10 வணிகவரித்துறை உதவி ஆணையர் மற்றும் 10 தீயணைப்புத்துறை அதிகாரி, 14 கூட்டுறவு துறை துணை பதிவாளர், 4 ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் என மொத்தமாக 66 பணியிடங்களுக்கு கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட குரூப் 1 தேர்வானது கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெற்றது. தமிழகத்திலிருந்து இப்பணிகளுக்கு 2,56,954 பேர் விண்ணப்பித்தது இருந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

tnpsc group 2 exams latest announcement

விவசாயிகள் போராட்டம் எதிரொலி – 1,178 ட்விட்டர் கணக்குகளை முடக்க மத்திய அரசுக்கு பரிந்துரை!!

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த 2.56 லட்சம் விண்ணப்பித்தார்களில் சுமார் 1,25 லட்சம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக தேர்வுதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு முறையிலும், வினா தாள்களிலும் பல புதிய கட்டுப்பாடுகளுடன் மாநிலம் முழுவதும் 856 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. வரும் மே மாதம் 28ம் தேதியிலிருந்து 30 தேதி வரையிலும் முதன்மை தேர்வுகள் நடைபெறவுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here