ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி குறைவு – இன்றைய நிலவரம்!!

0

இந்த மாதம் முதல் தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று யாரும் எதிர்பாராத வகையில் அதிகரித்தது. இதனால் நகை விரும்பிகள் கவலை அடைந்தனர். தற்போது இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்:

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்தது. இதனால் திருமணம் உட்பட பல்வேறு சுபநிகழ்ச்சிகளை நடத்த காத்திருந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பின்பு கடந்த பண்டிகை காலம் முதல் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது. தொடர் வீழ்ச்சியை தங்கத்தின் விலை சந்தித்து வந்ததால் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்கத்தை வாங்கி வந்தனர். தற்போது இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் 6, 7, 8ம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகள் திறப்பு – புதிய பாடத்திட்டங்கள் வெளியீடு!!

சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. இதனால் தற்போது 1 சவரன் ஆபரணத் தங்கம் ரூ.36,244க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.9 குறைந்து தற்போது 1 கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,528 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னையில் தற்போது 1 கிராம் வெள்ளி ரூ.74.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளி தற்போது ரூ.74,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here