ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பிய விண்கலம் புதிய சாதனை – விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சி!!

0

ஐக்கிய அரபு அமீரக நாட்டின் கனவு திட்டமான ஹோப் ப்ரோப் விண்கல திட்டம் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதனால் நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பாராட்டுகள் குவிந்த வண்ணமாக உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம்:

அனைத்து உலக நாடுகளும் விண்ணிற்கு பல விதமான விண்கலத்தை அனுப்பி வருகிறது. அதில் சில திட்டம் வெற்றி அடைந்து விடும். சில திட்டம் தோல்வியில் முடியும். இதேபோல் ஐக்கிய அரபு அமீரகம் தனது கனவு திட்டமாக ஹோப் ப்ரோப் விண்கலத்தை விண்ணில் செலுத்த தயாராகி வந்தது. இந்நிலையில் இந்த விண்கலத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது தேசிய தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி அன்று விண்ணில் செலுத்தியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு பல மாதங்கள் ஆகும். தற்போது 7 மாத கால பயணத்திற்கு பிறகு இந்த விண்கலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அது என்னவென்றால் இந்த விண்கலம் 7 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்தின் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு சாதனை படைத்துள்ளது.

சட்டசபை குட்கா விவகாரம் – மீண்டும் நோட்டீஸை ரத்து செய்த நீதிமன்றம்!!

இதனை அறிந்த விஞ்ஞானிகள் மற்றும் அரச குடும்பத்தார்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது. அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, ஐரோப்பா ஆகிய நாடுகளை தொடர்ந்து 5வது நாடக ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி அசத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here