New Year 2023 ஸ்பெஷல்.., நாளைக்கு டிவில இந்த படம் தான் போட போறாங்க.., பார்க்க ரெடியாகுங்க!!

0
New Year 2023 ஸ்பெஷல்.., நாளைக்கு டிவில இந்த படம் தான் போட போறாங்க.., பார்க்க ரெடியாகுங்க!!
New Year 2023 ஸ்பெஷல்.., நாளைக்கு டிவில இந்த படம் தான் போட போறாங்க.., பார்க்க ரெடியாகுங்க!!

புத்தாண்டை முன்னிட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்கள் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

புதிய படங்கள்:

பொதுவாக ஒவ்வொரு விசேஷ நாட்களில் மக்களை மகிழ்விக்க பல புது திரைப்படங்களை சேனல்களில் ஒளிபரப்பி அசத்துவார்கள். அந்த வகையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்கள் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் நாளை காலை 11 மணிக்கு சந்தானம் நடித்த ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படமும், மதியம் 3 மணிக்கு சூர்யா நடித்த சிங்கம் திரைப்படமும் ஒளிபரப்பாகிறது. மேலும் மாலை 6.30 மணிக்கு விஜய் நடித்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் மற்றும் 9 மணிக்கு பிரபு தேவா நடித்த குலேபகாவலி படம் டெலிகாஸ்ட் ஆகிறது.

இந்த விஷயத்தால் மார்க்கெட்டை இழந்த விஜய்சேதுபதி .., அட பாவமே உங்களுக்கா இந்த நிலைமை?

அதே போல் K டிவியில் 10 மணிக்கு அஜித்தின் பூவெல்லாம் உன் வாசம், மதியம் 1 மணிக்கு சுந்தர் சியின் கலகலப்பு படமும் மற்றும் SKவின் HERO திரைப்படம் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அதற்கடுத்து விஜய் டிவியில் மதியம் 3 மணிக்கு துல்கர் சல்மான் நடித்த சீதா ராமன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதே போல் ஜீ தமிழ் சேனலில் காலை 10 மணிக்கு வைபோ நடித்த காட்டேரி திரைப்படமும், மதியம் 1.30 மணிக்கு அஜித்தின் வலிமை படமும் டெலிகாஸ்ட் ஆகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் கலைஞர் தொலைக்காட்சியில் மதியம் 1.30 மணிக்கு விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் ஒளிபரப்பாகிறது. கலர்ஸ் தமிழ் சேனலில் 11 மணிக்கு அருள்நிதி நடித்த D பிளாக் படமும், மதியம் 2 மணிக்கு பாமா கலாபம் மற்றும் மாலை 5 மணிக்கு ஜிவி பிரகாஷ் நடித்த ஐங்கரன் திரைப்படம் டெலிகாஸ்ட் ஆகிறது. புத்தாண்டு தினத்தில் அனைத்து திரைப்படங்களையும் பார்த்து கண்டு களியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here