டிராக்டர் பேரணிக்கு பின்பு 100க்கும் மேற்பட்டவர்கள் மாயம் – விவசாயிகள் அதிர்ச்சி தகவல்!!

0

கடந்த குடியரசு தின விழாவின் போது விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். அதில் வன்முறை வெடித்தது. தற்போது பேரணிக்கு பின்பு 100கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாக விவசாயிகள் ஓர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்:

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி சுமார் கடந்த 2 மாத காலமாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கும் அரசுக்கும் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. மேலும் கடந்த குடியரசு தின விழாவின் போது விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினார்கள். குடியரசு தின விழாவிற்கு எந்த வகையிலும் பாதிப்பு வர கூடாது என்று கூறி போலீசாரும் இதற்கு அனுமதி வழங்கினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் டிராக்டர் பேரணியில் பெரிய வன்முறையே வெடித்தது. மேலும் அந்த வன்முறையில் 100கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் போலீசார் காயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் கைது நடவடிக்கையும் மேற்கொண்டனர். தற்போது விவசாயிகள் தரப்பில் ஓர் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் டிராக்டர் பேரணியில் கலந்துகொண்ட 100கும் மேற்பட்டவர்களை தற்போது காணவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதித்த 97% பேர் டிஸ்சார்ஜ் – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

இதனால் அனைவரும் அதிர்ந்து போய் உள்ளார்கள். தற்போது இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள 6 பேர் கொண்ட தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. மாயமானவர்கள் குறித்து இந்த குழு விசாரித்து அதனை போலீசாரிடம் தெரிவிக்கவுள்ளனர். இதனை மயுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மாயமானவர்களை பற்றி தகவல் தெரிவிக்க ஓர் அலைபேசி எண்ணையும் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here