இந்தியாவில் கொரோனா பாதித்த 97% பேர் டிஸ்சார்ஜ் – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

0

தற்போது இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் கொடிய வைரஸ் அனைவரையும் துன்புறுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் இந்தியாவிலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. முன்பு விட தற்போது இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பாதிப்பு:

தற்போது இதுகுறித்து ஓர் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸில் இருந்து சுமார் 11,858 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,04,34,983 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் சதவீதம் 97 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 11,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பட்ஜெட் 2021 – உடனுக்குடன் தகவல்கள்!!

இதனால் மொத்தமாக கொரோனாவால் 1,07,57,610 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 118 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை 1,54,392 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 1,68,235 பேர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 5,04,263 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 19 கோடி 70 லட்சத்து 92 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here