#INDvsENG டெஸ்ட் தொடர் – பிரதமர் மோடி, அமித்ஷாவிற்கு அழைப்பு!!

0

தற்போது வரும் 5ம் தேதி முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3 வது மற்றும் 4 வது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியாவில் ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் தொடரை விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 5ம் தேதி முதல் துவங்குகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை சென்னை சேப்பாக்க மைதானத்தில் வைத்து நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டி அஹமதாபாத் மோதேரா மைதானத்தில் வைத்து நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ ஆலோசித்து வந்தது. ஆனால் தற்போது வரை அதைப்பற்றிய தகவல் வெளியாகவில்லை. ஆனால் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டி நடக்கவிருக்கும்
மோதேரா மைதானத்திற்கு 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அந்த மைதானத்தில் 1,10,000 ரசிகர்கள் காணும் வகையில் இருக்கும்.

டிஜிட்டல் முறையில் இந்த ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் – நிர்மலா சீதாராமன் உரை!!

கொரோனா அச்சம் காரணமாக 50,000கும் மேற்பட்ட ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ள்ளது. மேலும் 3வது போட்டியை காண இந்திய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜூ மற்றும் பிசிசிஐ முன்னணி தலைவர் நட்டா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்த மைதானத்திற்கு இரண்டாவது முறையாக வரவுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்காக இங்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here