விராட் கோஹ்லி – அனுஷ்கா ஷர்மா குழந்தையின் முதல் புகைப்படம் – இணையத்தில் வைரல்!!

0

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியருக்கு கடந்த ஜனவரி 11 ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தற்போது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை அனுஷ்கா சர்மா சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

பெண் குழந்தை

கடந்த 2017 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து சில நாட்களிலேயே அனுஷ்கா ஷர்மா சினிமா துறையை விட்டு சற்று ஒதுங்கியே இருந்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் ஆகஸ்ட் 27 ம் தேதி விராட் மற்றும் அனுஷ்கா தம்பதிகள் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்திருப்பதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

லட்சுமி கண்ணம்மாவோட குழந்தைனா அப்போ ஹேமா யாரு?? குழப்பத்தின் உச்சத்தில் வெண்பா!!

அவர்களது இந்த பதிவிற்கு பலர் தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் வந்தது. அவர்கள் அறிவித்தது போல கடந்த ஜனவரி 11 ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது ஒரு மாதங்கள் கடந்த நிலையில் நடிகை அனுஷ்கா சர்மா தனது மகளின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த குழந்தையின் பெயர் வாமிகா என்றும் அனுஷ்கா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here