டிஜிட்டல் முறையில் இந்த ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் – நிர்மலா சீதாராமன் உரை!!

0

பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.

பட்ஜெட் தாக்கல்

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. கூட்டத்தின் முதல் நாளில் இந்த ஆண்டிற்கான மத்திய நிதிக்கான பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். தொடர்ந்து சனிக்கிழமை பிரதமர் தலைமையிலான அனைத்து கட்சிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. தற்போது மூன்றாவது முறையாக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கடந்த இரண்டு அறிக்கைகளும் காகித வடிவில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மத்திய பட்ஜெட் 2021 – உடனுக்குடன் தகவல்கள்!!

தற்போது இன்றைக்கான பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்படப்போகிறது. இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறிய போது, இந்தியாவில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டேப்லெட் ஒன்றை வைத்து இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய போவதாக தெரிவித்தார். தொடர்ந்து இந்த பட்ஜெட் தாக்கல் முறை வித்தியாசமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த முயற்சி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் இருக்கிறது எனவும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here