மத்திய பட்ஜெட் 2021 – உடனுக்குடன் தகவல்கள்!!

0

தற்போது மத்திய பட்ஜெட்டினை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இந்த ஆண்டு பல வித எதிர்பார்ப்புகளுடன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் இடம் பெற்றிருப்பது,

மக்களுக்கு பயனுள்ள பல அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர் தாக்கல் செய்து வரும் மத்திய பட்ஜெட்டிற்கு பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  • கொரோனா தடுப்பூசிக்காக 35, 000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். கொரோனாவிற்கு எதிரான 2 புதிய தடுப்பூசிகளை இந்தியா அறிமுகப்டுத்தியுள்ளது. இதனை ஊக்குவிக்க இந்த நிதி வழங்கப்டுள்ளது.
  • இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் புதிய கிளை துவங்கப்படும். அதே போல் பிரதமர் மோடியின் திட்டமான “ஸ்வஸ்த் பாரத்” அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக 64, 180 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நீர்வளத்துறையில் “ஜல் ஜீவன் மிஷன்” என்ற திட்டம் துவங்கப்பட உள்ளது. இந்த திட்டம் நீர் வள துறையின் மேம்பாட்டிற்காக அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
  • ஜவுளித்துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்தியாவில் முதலீட்டு பூங்கா ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் இந்தியாவில் உள்ள ஜவுளி துறையின் மேம்பாட்டிற்காக அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
  • இந்தியில் மேலும், இரண்டு தடுப்பூசிகள் செயல்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறும். இதற்காக தனி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கொரோனா பரவலை தடுக்க நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பிரதமரின் சுயசார்பு திட்டத்தின் மொத்த மதிப்பு 64, 180 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் குடிநீர் வசதியினை மேம்படுத்த 2.87 லட்சம் மதிப்பில் புதிய திட்டம். 1.41 லட்சம் மதிப்பில் நகர்ப்புற சுகாதார திட்டத்தினை மேம்படுத்த புதிய திட்டம்.
  • கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த என்று 7, 400 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
  • அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
  • தமிழகத்தில் உள்ள மதுரை முதல் கொல்லம் இடையேயான சாலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு துவக்கப்படும். 1.03 லட்சம் கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் சாலைகள் அமைக்கப்படும்.
  • நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் குழாய் மூலம் குடிநீர் வசதி தரும் விதமான திட்டங்கள் அமல்படுத்தப்படும். இந்த ஆண்டிற்கான பட்ஜெட் சுகாதாரம் உள்ளிட்ட ஆறு தூண்களை உள்ளடக்கியுள்ளது.
  • இந்தியாவில் வங்கி டெபாசிட் காப்பீடு தொகை 1 லட்சமாக இருந்தது தற்போது 5 லட்சமாக உயர்ந்துள்ளது. வங்கி துறையில் பல சாதனைகளை அரசு செய்து வருகின்றது.
  • பாரத் பெட்ரோலியம் மற்றும் ஏர் இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
  • அரசின் கீழ் செயல்பட்டு வரும் வங்கிகளை மேம்படுத்த பல திட்டங்கள் அறிமுகம். இதற்காக, 20, 000 கோடி ரூபாய் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டுகளில் 49 சதவீதமாக இருந்தது. தற்போது அது 74 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் உள்ள பெரு நகரங்களை தொடர்ந்து அடுத்த கட்ட நகரங்களில் இனி வரும் ஆண்டுகளில் குறைந்தபட்ச கட்டணத்துடன் மெட்ரோ சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.
  • நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அகல ரயில் பாதைகள் வரும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மின்மயமாக்கப்படும்.
  • தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய முக்கிய அம்சங்களில் இந்தியாவின் சுகாதாரத்துறை கவனம் செலுத்துகிறது.
  • சென்னை, கொச்சி உட்பட 5 முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்.
  • சிறு, குறு உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்காக அரசு சார்பில் 15, 000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விவசாய கடன்கள் 16.5 லட்சம் கோடியாக உயர்த்த நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • நாட்டில் உள்ள 15, 000 பள்ளிகளின் தரம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 100 ஷைனிக் பள்ளிகள் புதிதாக திறக்கப்படும்.
  • பெண்கள் அனைத்து துறைகளிலும் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு நேர பணிகளில் பணிபுரியவும் அனுமதி.
  • 75 வயதிற்கும் மேற்ப்பட்டவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய இருந்த நிலைக்கு விலக்கு.
  • இந்த ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் நிதி பற்றாக்குறை 6.8 சதவீதமாக குறையும்.
  • தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும். தமிழகத்தில் கடல் பாசியினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தேர்தல் நடைபெற இருக்கும் 5 மாநிலங்களில் சாலைப்பணிகள் சிறப்பாக செய்யப்படும்.
  • மின்னணு பண பரிவர்த்தனைக்கு சலுகைகள் வழங்கப்படும்.
  • வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பும் போது இரட்டை வரி விதிப்பிற்கு ஆளாவதை தவிர்க்க அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளபடும்.
  • ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றை நம்பியிருக்கும் மூத்த குடிமக்கள் (75 வயதிற்கு மேற்பட்டவர்கள்) வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சிறிய அளவிலான வருமான வரி சச்சரவுகளை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபடும். அதற்கு என்று தனி குழு அமைக்கப்படும்.
  • சுற்றுசூழல் பாதுகாப்பினை உறுதி செய்ய பழைய வாகனங்களை திரும்ப பெரும் கொள்கை அறிமுகம் செய்யப்படும்.
  • குறைந்த அளவில் வீடு வாங்குவோருக்கான வட்டி சலுகை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • தங்கத்திற்கான இறக்குமதி விகிதம் 12.5 சதவீதமாக இருந்தது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • அதே போல் இந்த வருமான வரி உச்சவரம்பு குறித்து பட்ஜெட்டில் எந்த வித மாற்றமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here