மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி – முதல்வர் அறிவிப்பு!!

0

தற்போது தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதத்தில் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை தெடர்ந்து விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகள்:

இந்த ஆண்டு தொடக்கத்தில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான மழை பெய்தது. ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தில் 12.3மிமீ மழை பெய்யும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு 136.3 மிமீ மழை பதிவாகியுள்ளது. இயல்பாக பெய்யும் மழையை விட இந்த முறை 1,108 விழுக்காடு அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் 24 மணி நேரமும் சுமார் 25 சென்டிமீட்டர் வரை மழை பதிவாகி உள்ளது. அதனால் விவசாய துறை கடுமையாக பாதிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குறிப்பாக 6.62 லட்ச எக்டர் வேளாண் மற்றும் 18 லட்ச எக்டர் தோட்டக்கலை பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 11.43 லட்ச விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதி உதவியின் பெயரில் நிதி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அவர் கூறியதாவது, 6.81 லட்ச எக்டர் நிலங்களுக்கு நிவாரண தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புயல் நிவாரண தொகையாக ஏற்கனவே விவசாயிகளுக்கு ரூ.543.10 கோடி ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பட்ஜெட் இன்னும் சிறிது நேரத்தில் தாக்கல் – பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்!!

தற்போது மழையினால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 900.82 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதனை தொடர்ந்து வரும் 3,4 மற்றும் 5 ஆகிய தேதியில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட மத்திய குழு முடிவெடுத்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக ரூ. 1,116 கோடி வழங்க முடிவெடுத்துள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here