பிரபல சீரியலில் குட்டையை குழப்ப என்ட்ரி கொடுக்கும் நியூ என்ட்ரி.., இனி தான் கதையே ஸ்டார்ட்!

0
பிரபல சீரியலில் குட்டையை குழப்ப என்ட்ரி கொடுக்கும் நியூ என்ட்ரி.., இனி தான் கதையே ஸ்டார்ட்!
பிரபல சீரியலில் குட்டையை குழப்ப என்ட்ரி கொடுக்கும் நியூ என்ட்ரி.., இனி தான் கதையே ஸ்டார்ட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறது பேரன்பு சீரியல். இதில் தன்னுடைய மருமகள் செய்தது சரிதான் என்று புரிந்து வானதியை மருமகளாக ஏற்றுக் கொண்ட அத்தை ராஜ ராஜேஸ்வரி அவரது பிறந்த நாளை மிக பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்கிறார். இந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக அந்த விழாவிற்கு ஒருவர் என்ட்ரி கொடுத்து, நான் தான் வானதியின் அம்மா வசுந்தரா தேவி என கூறுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை ராஜ ராஜேஸ்வரி முழுவதுமாக நம்புகிறார். ஆனால் வானதி மற்றும் தாத்தா இருவருக்கும் வசுந்தராவின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை இல்லை. இதுபோக இந்த சீரியலில் வசுந்தராவாக நியூ என்ட்ரி கொடுத்திருக்கும் ‘ஜீவிதா’ வானதியின் சித்தி அமுதா அனுப்பிய ஆள் என்ற உண்மை கூடிய விரைவில் ராஜராஜேஸ்வரிக்கு  தெரிய வரும். எனவே, அமுதா அவரிடம் கையும் களவுமாக சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் அசிங்கப்படும் ஜீவா.., வெந்த புண்ணில் வேல்லை பாய்ச்சும் பார்வதி.., ஜனார்த்தனன் போடும் மாஸ்டர் பிளான்!!

மேலும் இதை வைத்து பார்க்கும் போது வானதியின் உண்மையான அம்மா யார் என்று தெரிந்து கொள்ள வானதி எடுக்கும் முயற்சியை நோக்கி இந்த சீரியலின் கதை களம் இனி நகர வாய்ப்பு உள்ளது. மேலும் அதன் பிறகு வானதியின் அம்மா கேரக்டரை அறிமுகப்படுத்தி அனல் பறக்கும் எபிசோடுகளுடன் இந்த சீரியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here