பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்கு வாய்ப்பு., ரிசர்வ் வங்கி கொடுத்த விளக்கம்!!

0
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்கு வாய்ப்பு., ரிசர்வ் வங்கி கொடுத்த விளக்கம்!!
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்கு வாய்ப்பு., ரிசர்வ் வங்கி கொடுத்த விளக்கம்!!

இந்தியாவில் கோடிக்கணக்கான கருப்புப் பணத்தை ஊழல் செய்து பதுக்கி வைத்தவர்களை வெளி கொண்டு வர பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார். அதன்படி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி முன்னறிவிப்பு ஏதுமின்றி தொலைக்காட்சி வழியாக நாடு முழுவதும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்தார். இதனால் இந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளை பெறுவதற்கு வழி வகுத்திருத்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கான கால அவகாசமும் 2017ம் ஆண்டோடு முடிவடையும் என்பதால் பொதுமக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருந்து அவதியுற்றனர். இதில் வேதனைக்குரிய செயல் என்னவென்றால் சில பகுதிகளில் இந்த தகவல் சென்றடையாததால் இன்றளவும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கையில் வைத்து கொண்டு செய்வதற்கரியாமல் பெரும்பாலானோர் திகைத்து வருகின்றனர். இந்நிலையில் சமூக ஊடகங்களில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி வாய்பளித்ததாக கடிதம் ஒன்று பரவி வருகிறது.

அரசு பெண் ஊழியர்களுக்கு 7 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு.., , முதல்வர் அறிவிப்பு!!

மேலும் இதில் இந்த வாய்ப்பு வெளிநாட்டவருக்கு மட்டுமே என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த தகவல் முற்றிலும் போலியானது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே இதுபோன்ற வதந்திகளின் உண்மை அர்த்தம் தெரியாமல் மற்றவருக்கு ஷேர் செய்ய வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here