ஒரே மேடையில் கூடிய கலர்ஸ், ஜீ தமிழ், சன் டிவி நாயகிகள் – இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0

ஜீ தமிழ், கலர்ஸ் டிவி, சன் டிவி என மூன்று சேனல்களிலும் ஒளிபரப்பாகி வரும் மூன்று பிரபலமான சீரியலின் கதாநாயகிகள் ஒன்றாக இணைந்து எடுத்துள்ள செல்பி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகைகள் புகைப்படம்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ‘பூவே உனக்காக’. இந்த சீரியலில் பூவரசி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. தன் தோழிக்காக காதலை தியாகம் செய்யும் ஒரு பெண் என்னவெல்லாம் கஷ்டங்களை சந்திக்கிறாள் என பூவே உனக்காக சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடருக்கு ஏகப்பட்ட ரீச் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்ததாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் சஹானாவாக நடித்து வருபவர் நடிகை ஹீமா பிந்து. சமீபகாலமாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது இந்த இதயத்தை திருடாதே சீரியல். இதில் வரும் சிவா, சஹானாவின் காதல் காட்சிகள் இளைஞர்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி யாருகூட இருக்காங்கனு பாருங்களே – இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

அதே போல ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த தொடரில் பல்வேறு நாட்களுக்கு பிறகு பார்வதி மற்றும் ஆதியை, அகிலாண்டேஸ்வரி வீட்டுக்குள் சேர்த்துள்ளார். இந்த தொடரும் சிறப்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த தொடரில் பார்வதியாக நடிகை ஷபானா ஷாஜகான் நடித்து வருகிறார்.

பொதுவாக ஒரு சீரியல் நடிகையும் மற்றொரு சீரியல் நடிகையும் சந்திக்கும் போதே அது ஹாட் டாப்பிக்காக பேசப்படும். தற்போது வெவ்வேறு சேனலின் பூவே உனக்காக, செம்பருத்தி, இதயத்தை திருடாதே சீரியல் நடிகைகள் ஒன்று சேர்ந்துள்ளனர். அந்த வகையில் ராதிகா, ஷபானா, ஹீமா பிந்து எடுத்துள்ள செல்பி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here