பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி யாருகூட இருக்காங்கனு பாருங்களே – இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் மூர்த்தியும், பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் பாக்கியலட்சுமியும் இணைந்து எடுத்துள்ள ஒரு கேசுவல் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் ஸ்டாலின். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தின் மொத்த பாரத்தையும் தாங்கும் மூத்த அண்ணனாக நடித்து அனைவரின் உள்ளங்களில் இடம் பிடித்துள்ளவர் நடிகர் ஸ்டாலின். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு மட்டுமல்ல தமிழக மக்களின் உள்ளங்களிலும் இவர் அண்ணனாக வலம் வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே சமயம் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமி என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருபவர் நடிகை சுசித்ரா. பாக்கியலட்சுமியில் ஒரு அம்மாவாக எல்லா ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் வாங்கி பிள்ளைகளுக்கு நல்லது செய்யவேண்டும் என நினைக்கிற பாவமான அம்மாவாக நடித்து வருகிறார் சுசித்ரா.

‘எங்க தலைவிக்கு தில்ல பாத்தியா’ – வைரலாகும் ஷெரினின் வீடியோ!!

இந்த இரு கதாப்பாத்திரங்களும் தமிழக குடும்பங்களின் நிலையை அச்சு அசலாக படம் பிடித்து காட்டியிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ஸ்டாலின் மற்றும் நடிகை சுசித்ரா இருவரும் சேர்ந்து எடுத்துள்ள கேசுவலான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

முன்னதாக விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியலின் மகா சங்கமம் நடைபெற்றது. அந்த படப்பிடிப்பில் வைத்து தான் இருவரும் அந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர் என தெரிகிறது. எப்படி இருந்தாலும் அண்ணன் தங்கையின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here