பாகத்தானே போறீங்க என்னோட ஆட்டத்த – ஷகிலா அதிரடி பேட்டி!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த ஷகிலா தற்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். கட்சியில் சேர்ந்த பின்பு அவர் தற்போது பேட்டியளித்துள்ளார்.

ஷகிலா:

சினிமாவில் கவர்ச்சி படங்கள் மூலம் பிரபலமானவர் தான் ஷகிலா. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளார்கள். பின்பு இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி இவரது அடையாளத்தையே மாற்றிவிட்டது என்று கூட சொல்லலாம். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் அம்மா என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு மிக முக்கிய காரணம் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் புகழ் என்று தான் சொல்லவேண்டும். இந்த நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு வரவுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் பைனலுக்கும் ஷகிலா முன்னேறிவிட்டார். சமையல் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதில் குடியேறிய ஷகிலா தற்போது அரசியலிலும் தனது கால்தடத்தை பதித்துள்ளார். அதன்படி இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.

தனுஷுக்கு அடுத்ததாக ஹிந்தியில் கால்பதிக்கும் விஷால் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

கட்சியில் சேர்ந்த இவருக்கு மனித உரிமை மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் ஷகிலா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தற்போது தான் அரசியலில் சிலவற்றை கற்றுக்கொண்டு வருகிறேன், நான் அரசியலில் ஒரு போதும் சுயநலமாக செயல்படமாட்டேன். மேலும் தற்போது தமிழகத்தில் நடக்கும் பாலியல் குற்றம் குறித்து மிகவும் வருந்தினார்.

Shakeela: No regrets over being a porn artiste

தொடர்ந்து பேசிய ஷகிலா நான் காங்கிரஸ் கட்சியில் குஷ்புவின் இடத்தை நிரப்புவதற்கு வரவில்லை. அவர் எனக்கு சீனியர். இந்த கட்சியில் நான் சேருவதற்கு ஓர் காரணம் உள்ளது. அதுபோல் அவர் இதில் இருந்து விலகியதற்கும் ஓர் காரணம் இருக்கும். அவரை என்னுடன் ஒப்பிடாதீர்கள். இப்பதான் அரசியலுக்கு வந்துள்ளேன் இனி எனது ஆட்டத்தை அனைவரும் பார்ப்பீர்கள் என்று கெத்தாக கூறியுள்ளார் ஷகிலா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here