தனுஷுக்கு அடுத்ததாக ஹிந்தியில் கால்பதிக்கும் விஷால் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஷாலுக்கு நேர்ந்த சோகம் - ரத்தம் சொட்ட..சொட்ட வெளியான வீடியோ!!
ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஷாலுக்கு நேர்ந்த சோகம் - ரத்தம் சொட்ட..சொட்ட வெளியான வீடியோ!!

கோலிவுட் காத்து இப்போ பாலிவுட் பக்கம் வீசிக்கொண்டிருக்கிறது. நடிகர் தனுஷை அடுத்து நடிகர் விஷால் பாலிவுட் பக்கம் போக போறாராம். அதுவும் வில்லனாக நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால்

நடிகர் விஷால் தமிழ் திரையுலகின் ஒரு முன்னணி கதாநாயகர்களில் ஒருவர். சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்தவர். கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் விஷால் ஒரு திரைப்பட தயாரிப்பாளரும் கூட. நடிகர் விஷால் தமிழில் மட்டும் ஏறக்குறைய 35 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

43 வயதான நடிகர் விஷாலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவருடன் விஷாலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டது. தற்போது திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் விஷால் ‘எனிமி’, ‘துப்பறிவாளன் 2’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

‘குக் வித் கோமாளியின் இந்த வாரம் வேறலெவல் என்ஜாய்மென்ட்’ – வைரலாகும் புகைப்படங்கள்!!

பொதுவாக ஆக்சன் கதைகளை விரும்பி நடித்து வரும் விஷால் தமிழ் திரையுலகின் அதிரடி நாயகனாக இருந்து வருகிறார். விஷாலின் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான ‘இரும்புத்திரை’ திரைப்படம் தமிழில் ஹிட் அடித்தது. தொடர்ந்து இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படி இருக்க ஹிந்தியில் தயாராகும் இரும்புத்திரை திரைப்படத்தில் விஷால் வில்லனாக நடிக்க உள்ளாராம்.

இந்த தகவலின் அடிப்படையில் நடிகர் மாதவன், தனுசுக்கு அடுத்ததாக பாலிவுட்டில் கால் பதிக்க உள்ளார் நடிகர் விஷால். தற்போது ‘துப்பறிவாளன் 2’ திரைப்படத்தில் நடித்துவரும் விஷால் படப்பிடிப்பு முடிந்ததும் ஹிந்தி ரீமேக்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here