ஊரடங்கை மீறி வெளியே வராதீர்கள் இளைஞர்களே – போலீசிடம் மாட்டி வழக்கு பதிந்தால் அரசு வேலை கிடைப்பது கடினம்..!

0

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது ஆனால் தமிழகத்தில்  ஊரடங்கை மீறும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.ஊரடங்கை உத்தரவை மீறியதாக 1.63 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் ஆவார்கள்.

ஏப்ரல் 30 வரை நீடிப்பு

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24 ஆம் தேி முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.இப்பொழுது ஏப்ரல் 30 வரை நீடித்துள்ளது.அத்தியாவசிய தேவை தவிர வேறு எக்காரணத்துக்காகவும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியே வருபவர்கள் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்று கடுமையான விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டது.

அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டது. திருமணம், இறப்பு காரணங்களுக்காக மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால், மாநகராட்சியின் அனுமதி பெற வேண்டும்.என கடுமையான முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 லட்சத்தி 60ஆயிரம் பேர் மேல் வழக்குப்பதிவு:

பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகவே காணப்பட்டனர். மேலும், பலர் தேவைகளின்றி ஊர் சுற்றி வருகின்றனர்.  ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1 லட்சத்து 75 ஆயிரத்து 6366 பேரை கைது செய்து விடுவித்தினர். மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 477 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 39 ஆயிரத்து 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் இளைஞர்கள் ஆவார்கள்,

இளைஞர்கள் அரசு வேலையில் சேர்வது கடினம்:

இளைஞர்கள் மேல்தான் அதிகமாக வழக்கு பதிவு ஆகியுள்ளது அவர்களுக்கு எதிர்காலத்தில் அரசு வேலை கிடைப்பதற்கு பெரும் சிக்கல்கள் ஏற்படும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. ஒரு சில துறைகளில் மட்டும் நேரடி நியமனம் நடைபெறுகிறது.போட்டித்தேர்வு எழுதுவோரின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இதனால், வெறும் மதிப்பெண்னை மட்டும் பார்த்து ஆட்கள் தெரிவு செய்யப்படுவதில்லை. போட்டித் தேர்வு மதிப்பெண் முறையோடு சேர்த்து, அவர்களுடைய பள்ளித்தேர்வு மதிப்பெண், முன்னுரிமை சலுகை, குற்ற வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை எல்லாம் பார்த்து,

அதன் அடிப்படையில் அரசுப் பணிக்கு நியமனம் நடைபெற்று வருகிறது.தற்போது ஊரடங்கு உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள், அடுத்ததாக அரசுப்பணி தேர்வு எழுதும் போது, முன்னுரிமை இழக்கின்றனர். போட்டித்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், வழக்குப்பதிவு இருந்த ஒரே காரணத்தினால், வேலைவாய்ப்பு பெறாமல் போவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, இதனையும் கருத்தில் கொண்டு,கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரத்தையும் உணர்ந்து, தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here