Saturday, May 4, 2024

சேவலுக்காக அண்ணனை கொலை செய்த தம்பி – திண்டுக்கல்லில் நடந்த கொடூரம்!!

Must Read

சேவல் சண்டை காரணமாக சொந்த தம்பி தனது அண்ணனை கொலை செய்துள்ள சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கொலை செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

அண்ணன் – தம்பி சண்டை:

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரையை அடுத்துள்ள வீ.கல்லுப்பட்டியை சேர்ந்தவர்கள் முனியாண்டி,28. அவருக்கு 17 வயதில் ஒரு தம்பி உள்ளார். இவர்கள் இருவரும் தற்போது கூலி வேலை செய்து வருகின்றனர். இருவரும் அண்ணன் – தம்பியாக இருந்தாலும் சிறு சிறு விஷயங்களுக்கு கூட சண்டையிட்டு கொள்வர் என்று தெரிகிறது. இதனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தலைப்புச் செய்திகள் – சில வரிகளில்!!

Odisha man gets life for murder of grandmother- The New Indian Express

இப்படியாக இருக்க முனியாண்டியின் தம்பி ஒரு சண்டை சேவலை வளர்த்து வந்துள்ளார். இந்த சேவல் காணாமல் போயுள்ளது. இதனால் அவரது தம்பி மிகுந்த வேதனை அடைந்துள்ளார். பின், விசாரித்து பார்த்தபோது அவரது அண்ணன் முனியாண்டி தான் சேவலை திருடி வைத்துள்ளார் என்று இவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த தம்பி அவரது அண்ணன் முனியாண்டியிடம் விசாரித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம்:

வாய்த்தகராறு கைகலப்பில் வந்து முடித்துள்ளது. இதில் தம்பி கத்தியினை எடுத்து தனது அண்ணனை சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த அண்ணனை அரசு மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால், போகும் வழியிலேயே அவர் மரணம் அடைந்து விட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டியின் தம்பியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அனைத்து மக்களுக்கு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு., நாளை (மே 5) தொடக்கம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024-25ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -