சோர்ந்து போன தோனியால், சோகத்தில் ரசிகர்கள் – இறுதிவரை போராடிய தலைவன்!!

0

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிகள் மோதின. இதில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதெராபாத் அணி வெற்றி பெற்றது. இத்தொடரில் சென்னை அணிக்கு இது 3வது தோல்வியாக இருந்தாலும், கடைசி வரை போராடிய தோனி மிகவும் சோர்ந்து காணப்பட்டது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் பல நம்ப முடியாத நிகழ்வுகளும் நேற்றைய போட்டியில் பதிவாகியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதெராபாத்:

இரண்டு தொடர் தோல்விகளுக்கு பிறகு சென்னை அணி விளையாடிய போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் அணியிலும் ராயுடு, பிராவோ போன்ற நட்சத்திர வீரர்கள் இணைந்தது மேலும் பலத்தை அதிகரித்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதெராபாத் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு சன் ரைசர்ஸ் அணி 164 ரன்கள் அடித்தது.

சென்னை போன்ற பலம் வாய்ந்த அணிக்கு 165 இலக்கு பெரிது இல்லை என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப தொடங்கினர். டூ ப்ளசிஸ் (22) தவிர வாட்சன், ராயுடு, ஜாதவ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதன் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி மற்றும் ஜடேஜா பொறுப்பாக ஆடினர். கடந்த போட்டிகளில் சோபிக்காத ஜடேஜா நேற்றைய போட்டியில் அதிரடி காட்டினார். 35 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில் ஜடேஜாவும் அவுட் ஆனார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

துபாய் வெப்பநிலை, அனல் காற்று, ரன் இலக்கு என அனைத்து பக்கங்களில் இருந்தும் தோனிக்கு நெருக்கடி அதிகரித்ததால் களைத்து காணப்பட்டார். சென்னை அணியின் கடைக்குட்டி சிங்கம் சாம் கரண், தோனியுடன் கைகோர்த்தார். கடைசி 2 ஓவர்களில் பவுண்டரி, சிக்சர் அடிக்க முடியாமல் 2 ரன்களாக ஓடி தோனி மிகவும் சோர்வடைந்தார். தோனி மூச்சு இழைத்தது ரசிகர்களை கண்கலங்க வைத்தது. மறுபுறம் சாம் கரண் தன் பங்கிற்கு 2 சிக்ஸர்கள் அடித்தும் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இப்போட்டியில் சென்னை அணி தோல்வியை விட தோனி களைத்து காணப்பட்டது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. வெற்றியோ, தோல்வியோ நீங்கள் தான் எங்களுக்கு எப்போதும் ‘தல தோனி’ என ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இப்போட்டியில் ஜடேஜா கேட்ச் விட்டது, ரன் அவுட் ஆனதும் வில்லியம்சன் கோபமடைந்தது (உலகக்கோப்பை போட்டியில் நியூஸிலாந்து தோற்ற போதிலும் சிரித்துக் கொண்டே வலியை தாங்கியவர்) போன்ற நம்ப முடியாத நிகழ்வுகளும் நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here