Tuesday, May 14, 2024

வரலாறு காணாத அளவு முட்டை விலை உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!!

Must Read

தமிழகத்தில் முட்டையின் விலை நிலவரம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு இது அதிகமான விலை நிலவரமாக கருதப்படுகிறது.

கொரோனா பரவல்:

கடந்த மார்ச் மாதம் கொரோன நோய் பரவல் காரணமாக பொது முடக்கம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல தொழில்துறைகளும் முடங்கின. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம் அதிகபட்ச மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது. அதேபோல் தான் முட்டையின் விலையும் இருந்தது.

சோர்ந்து போன தோனியால், சோகத்தில் ரசிகர்கள் – இறுதிவரை போராடிய தலைவன்!!

egg price hike in tn
egg price hike in tn

கொரோனா முடக்கத்தால் ஒரு முட்டையின் கொள்முதல் விலை 1.50 என்று விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நாமக்கல்லில் சில மாதங்களாகவே முட்டையின் உற்பத்தி குறைக்கப்பட்டது. இப்படியான நிலையில் தற்போது கொரோனா பொது முடக்கம் சில தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.

விலை நிலவரம்:

அதனால் அத்தியாவசிய பொருளான முட்டையின் தேவையும் அதிகரித்தது. தேவை அதிகரித்து முட்டையின் உற்பத்தி குறைவாக இருப்பதால் முட்டையின் விலை என்றும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்று கோழி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு முட்டையின் கொள்முதல் விலை 5 ரூபாய் 16 காசுகள் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு இது வரலாறு காணாத விலை ஏற்றம் என்று கருதப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -