இந்தியாவில் மொபைல் போன்கள் விலை உயர வாய்ப்பு – ICEA அதிர்ச்சி தகவல்!!

0

மொபைல் போன்களின் டிஸ்பிளே மற்றும் பாகங்களின் இறக்குமதி வரியை மத்திய அரசு அதிகரித்து உள்ள காரணத்தால், விலை 3 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தொழில்துறை அமைப்பான ஐசிஇஏ தெரிவித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை பெருக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மொபைல் போன்கள் விலை:

உலக அளவில் மொபைல் போன்களின் 2வது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் உள்நாட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்தியா செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ஐசிஇஏ) தேசியத் தலைவர் பங்கஜ் மோஹிந்திரூ தெரிவித்துள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் மத்திய அரசு டிஸ்பிளே இறக்குமதி செய்வதற்கு 10 சதவீத வரி விதித்துள்ளதால் மொபைல் போன் விலையில் 1.5 முதல் 3 சதவீதம் வரை அதிகரிப்பு இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஐசிஇஏ உறுப்பினர்களில் ஆப்பிள், ஹவாய், சியோமி, விவோ மற்றும் வின்ஸ்ட்ரான் போன்ற முன்னணி மொபைல் நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சோர்ந்து போன தோனியால், சோகத்தில் ரசிகர்கள் – இறுதிவரை போராடிய தலைவன்!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதியை குறைக்கும் நோக்கில் இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here