உடம்பில் மேஜிக் பல நிகழ்த்தும் “மஞ்சள் பால்” – இவ்வளவு நன்மைகளா?? எளிய செய்முறை!!

0

இப்போ நாம வாழ்ந்துகிட்டு இருக்குற காலகட்டத்துல ஆடம்பரமா வாழுறத விட ஆரோக்கியமா வாழுறது தாங்க ரொம்ப முக்கியம். ஆரோக்கியத்தை பாதுகாக்குறதுக்கு நெறைய வழிகள் இருந்தாலும், அதுக்காக நாம நெறைய நேரம் செலவளிக்க வேண்டியதிருக்கும். கூடவே நெறைய மெனக்கெடல் பண்ண வேண்டியதிருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனா ரொம்ப சுலபமா நம்ம வீட்ல இருக்குற பொருள்களை வைச்சே இத செய்யலாம்ங்க. எல்லாருக்கும் தினமும் டீ, காபி குடிக்கிற பழக்கம் இருக்கும். அதுக்கு பதிலா இந்த மஞ்சள் பாலை தொடர்ந்து குடிச்சுப் பாருங்க… உங்க உடம்பு வெளிய சும்மா தகதகன்னு ஜொலிக்கும், உடம்புக்கு உள்ளேயும் அவ்வளவு மாற்றங்கள் நடக்கும்.

மஞ்சள் பால் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்:

* உடம்பில் இருக்கும் கழிவுகளை நீக்கும் ஆன்டிஆக்ஸைட் நிறைந்துள்ளதால், உடம்பில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.

* மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளை நீக்குவதற்கு உதவுகிறது.

* மூளை சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும், நினைவாற்றல் இருமடங்கு அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

* மஞ்சளில் இருக்கும் curcumin மன அழுத்தத்தை நீக்குகிறது.

* கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்து இதய நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

* இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்து கொள்ள உதவுகிறது.

* உடம்பில் இருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, அவை மேலும் பரவாமல் பாதுகாக்கிறது.

* உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும், ஜீரண பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

* மேலும் மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினியாகவும், உடல் எடை மெலிவதற்கும் பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்:

பால் – 1கப்

மஞ்சள்தூள் – 1 டீ ஸ்பூன்

நாட்டு சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

பட்டைத்தூள் – 1 டீ ஸ்பூன்

ஏலக்காய் – 2 இடித்தது

செய்முறை:

முதலில் பாலை நன்கு கொதி வரும் வரை காய்ச்ச வேண்டும். பிறகு அதில் மஞ்சள்தூள், பட்டைத்தூள், ஏலக்காய், நாட்டு சர்க்கரை சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து பாலை வடிகட்டி கொள்ள வேண்டும். இப்போது ஆரோக்கியமான “மஞ்சள் பால்” ரெடி. இதே போல் தொடர்ந்து செஞ்சு குடிச்சு பாருங்க… அப்புறம் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here